தனுஷ், கே.வி. ஆனந்த் இருவரும் முதன் முறையாக இணையும் புதிய படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
கே.வி. ஆனந்த்தின் ஆஸ்தான் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இப்படத்தின் பாடல் கம்போஸிங்கை ஹாரிஸ் ஆரம்பித்து விட்டார்.
இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. கே.வி. ஆனந்த் இயக்கிய ‘மாற்றான்’ படம் தோல்வியுற்றாலும் இயக்குனர் மீதுள்ள நம்பிக்கையில் அவருக்கு மீண்டும் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
தனுஷ் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின், மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இவை முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.