பாலா இயக்கிய ‘அவன் இவன்,’ மற்றும் ‘பாகன்’ படங்களில் ஹீரோயினாக நடித்த ஜனனி ஐயர் தற்போது நடித்து வரும் படம் ‘தெகிடி’.
தமிழை விட மலையாளத்தில் “கூதரா, செவன்த் டே, மோசையில் குதிர மீனுகள், எடிசன் போட்டோஸ்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் சில பத்திரிகைகளில் ஜனனி ஐயர், இனி தமிழ்ப் படங்களில் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்தாகவும், மலையாளத்தில் மட்டுமே நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
அப்படிப்பட்ட செய்திகளில் எந்த உண்மையுமில்லை என்கிறார் ஜனனி ஐயர்.
நேற்று நடந்த ‘தெகிடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,
“நான் மலையாளப் படம் பண்றதால இனி தமிழ்ப் படம் பண்ண மாட்டேன்னு சில பேர் எழுதியிருந்தீங்க. என்னோட துணி மணிலாம் ‘பேக்’ பண்ணி, கொச்சின் போயிட்டன்னு எழுதியிருந்தீங்க.
உங்களுக்குலாம் ஒரு விளக்கம் தர விரும்பறன். நான் எங்கயும் போகலை, சென்னையிலதான் இருக்கப் போறன், அவ்வளவு சீக்கிரம் என்னை துரத்தாதீங்க, ” என்று பேசினார்.
அவங்க குரல்ல இருந்த வருத்தம் நேர்ல பார்த்த எங்களுக்குத்தான் தெரியும்…
அழகான தமிழ்ப் பெண்களை துரத்தறதுல யாருக்கு என்னப்பா சந்தோஷம்…
