இயக்குனர்கள் நடிகர்களுக்காக காத்திருக்காதீங்க – சசிகுமார்

director sasikumar 1002

அறிமுக இயக்குனர் சாக்ரடீஸ் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், இயக்குனர் சசிகுமார் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கும் ‘பிரம்மன்’ படத்தின் பத்திரிகையாளர்  சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது படத்தின் நாயகன் சசிகுமார் பேசியதாவது,

“ஒரு ஆட்டோ டிரைவரா இருந்து முன்னேறி இவ்வளவு பெரிய புரொடியூசர் ஆகியிருக்காரு தயாரிப்பாளர் மஞ்சு. கன்னடத்துல இருந்து அவர் தமிழுக்கு வந்திருக்காரு, அவர் ஜெயிக்கணும்.

நான் வெற்றி,  தோல்வியைப் பார்த்துட்டேன். இந்த படம் தயாரிப்பாளருக்காகவும், இயக்குனர் சாக்ரடீஸுக்காகவும் வெற்றியடையணும்.

நான் ஒரு டைரக்டர். ஒருத்தர் கதை சொல்ல வரும் போது, அவங்களை காத்திருங்கன்னு ஒரு நடிகர் மாதிரி சொல்லி என்னால காத்திருக்க வைக்க முடியாது. என்னை ஒரு நடிகர் அப்படி சொல்லும் போது எனக்கும் அந்த வருத்தம் இருக்கும்.

இந்த படத்துக்காக சாக்ரடீஸ் என்னைத் தேடும் போது, நான் ‘ஈசன்’ படம் டைரக்ட் பண்ணிட்டிருந்தேன். அப்புறம் நான் ‘போராளி’ படத்துல நடிக்க வேண்டியிருந்தது. அதுக்கப்புறமா நடிகரா மூணு படம் செய்யணும்னு நினைச்ச போதான் சாக்ரடீஸை கதை சொல்லச் சொன்னேன். அப்பதான் ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப் புலி’ படங்கள் மூலமா இரண்டு இயக்குனர்களை அறிமுகப்படுத்தினேன். மூணுவதா சாக்ரடீஸை வந்து கதை சொல்ல சொன்னேன். எனக்கு யாரையும் கதை சொல்லி காத்திருகக வைக்க பிடிக்காது.

இயக்குனர்களை எனக்காக காத்திருக்க வைக்க நான் விரும்பவில்லை. இயக்குனர்கள் நடிகர்களுக்காக காத்திருக்காதீங்க. நீங்க கிரியேட்டர், ஒரு இயக்குனர் வந்து ஒரு எழுத்தாளர் , படைப்பாளி, நீங்க தான் பிரம்மன், பிரம்மன் யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. படைப்பவன்தான் பிரம்மா, அவன் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது,” என்று சசிகுமார் பேசினார்.

Read Previous

‘லூசியா’ ரீமேக்கில் சித்தார்த்…

Read Next

‘பிரம்மன்’ – மேடையில் அழுத இயக்குனர்…காரணம் என்ன ?