விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை’...

27 Mar 2014
vishal-and-sruthihaasan‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஹரி, விஷால் இணையும் படத்திற்கு ‘பூஜை’ என பெயர் வைத்திருக்கிறார்கள். விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளிவர உள்ளது. இதைத் தொடர்ந்து விஷால், அவரது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் ‘பூஜை’ படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக முதன் முறையாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ‘ 3 ’ படத்திற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் நடிக்கும் தமிழ்ப் படம் இது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், ராதிகா நடிக்கிறார்கள். மற்றும் சூரி, முகேஷ் திவாரி, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், அபிநயா, சித்தாரா, கௌசல்யா, ரேணுகா, ஐஸ்வர்யா, ஜானகி சபேஷ், சார்லி, மனோபாலா, சந்தானபாரதி, கராத்தே ராஜா, பிளாக் பாண்டி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது-

Share via: