‘குக்கூ’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்...

27 Mar 2014
cucukoo director raju murugan got a car‘குக்கூ’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே சுமார் 6 கோடி ரூபாய் வசூலானதால் மகிழ்ச்சியடைந்த, அப்படத்தின் தயாரிப்பாளர் சண்முகம், படத்தின் இயக்குனர் ராஜு முருகனுக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இப்படத்திற்கான வெற்றிச் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சண்முகம், இயக்குனர் ராஜு முருகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் பி.கே. வர்மா, படத்தொகுப்பாளர் சண்முகம் வேலுசாமி, படத்தின் நாயகன் தினேஷ், நாயகி மாளவிகா, தினேஷ் நண்பனாக நடித்த இளங்கோ  ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சண்முகம்,“ராஜா ராணி’ படத்தைத் தொடர்ந்து எங்களது ‘குக்கூ’ படமும் சிறந்த படமாகவும் அதே சமயம் வசூலிலும் சிறப்பான படமாகவும் அமைந்து விட்டது. படத்தைப் பார்த்த பலரும் வித்தியாசமான படமாக இருப்பதாகப் பாராட்டுகிறார்கள். எங்களது நிறுவனத்தின் அடுத்த படத்தையும் ராஜு முருகன்தான் இயக்க உள்ளார். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார். அதோடு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இயக்குனர் ராஜு முருகனுக்கு புது கார் ஒன்றைப் பரிசாகவும் வழங்கினார். பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறியவர் ராஜு முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.    

Share via: