இன்றைய ரிலீஸ் - 4 படங்கள்
28 Mar 2014
இன்று 28 மார்ச் 2014 - வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்...
நெடுஞ்சாலை
ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்க ஃபைன் ஃபோகஸ் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் சத்யா இசையமைத்துள்ள படம். ஆரி, ஷிவதா, தம்பி ராமையா, சலீம் குமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
ஒரு ஊர்ல
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.எஸ். வசந்தகுமார் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள படம். வெங்கடேஷ், நேகா பட்டீல், பேபி சௌந்தர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மறுமுனை
எம்பிஎல் பிலிம்ஸ் தயாரிப்பில் மாரீஷ் குமார் இயக்கத்தில் சத்யதேவ் மற்றும் தாஜ்நூர் இசையமைத்துள்ள படம். மாருதி, மிருதுளா பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இனம்
திருப்பதி பிரதர்ஸ் வழங்க சந்தோஷ் சிவன் புரொடக்ஷன் தயாரிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் விஷால் இசயமைத்துள்ள படம். சுகந்தா, கரண், சரிதா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.



