‘நெடுஞ்சாலை’ மூலம் திரைப்பயணத்தைப் பிடித்த ஆரி...

28 Mar 2014
actor aari முன்பெல்லாம் திரைத் துறைக்கு வருவதற்கு முன், நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெறுவார்கள். எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான். இன்றைக்கு அப்படி நாடகத்தில் முறையாக 7 ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்துள்ளவர் ஆரி. மேஜிக் லாந்தர்ன், தியேட்டர் நிஷா மற்றும் இன்லேன்ட் தியேட்டர்ஸ் போன்ற நாடகக் குழுக்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2010-ல் தான் அறிமுகமான முதல் படமான ரெட்டைச் சுழியில் இந்திய சினிமாவின் சிகரங்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவுடன் நடித்த பெருமைக்குரியவர். பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்த புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் ஆரிதான். இதுபோல பல புதுமுகங்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். இவர் ஒரு பிட்னஸ் பயிற்சியாளரும்கூட. நடிகர்களை வயதுக்கேற்ற தோற்றத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்பெஷலிஸ்ட். சேரனின் ‘ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து,’  ‘கற்றது தமிழ்’ படத்தில் ஜீவா, ‘மிருகம்’ படத்தில் ஆதி, ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் சசிகுமார், ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்திபன், ‘யோகி’யில் அமீர் ஆகியோருக்கு அவர்களின் ஃபிட்னெஸ் மற்றும் வயதுக்கேற்ற தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு வந்தவர் ஆரிதான். சேரன் - நவ்யா நாயர் நடித்த ‘ஆடும் கூத்து’ படத்திலும் ஆரி நடித்துள்ளார். nedunchalai_00002142012-ல் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தில் நாயகனாக நடித்தார் ஆரி. அடுத்து அவர் நடித்த படம்தான் கிருஷ்ணா இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ள 'நெடுஞ்சாலை'. உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க சாலையில் நடக்கும் கதை இது. பார்த்த பத்திரிகையாளர்களும் திரையுலகினரும் படத்தை பாராட்டியுள்ளனர். ஆரியின் நடிப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் ஆரி எதிர்ப்பார்த்த அவருக்கான இடத்தை இந்த 'நெடுஞ்சாலை' பெற்றுத் தந்துள்ளதாகவே இயக்குநர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Share via: