என்னைப் பார்த்து பொறாமைப்படுவார்கள்… – விவேக்

naanthan bala vivek news

2014ம் வருடம் தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு சாதனையான வருடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதில் குறிப்பிடத்தக்க பல விஷயங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஒரு விஷயம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களைப் பற்றியது.

இந்த ஆண்டில் தமிழக ரசிகப் பெருமக்களை தங்களது நகைச்சுவை நடிப்பால் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் நாயகனாக நடித்துள்ள படங்கள் வெளிவர இருக்கின்றன.

கவுண்டமணி நடிப்பில் ‘49 ஓ’, விவேக் நடிப்பில் ‘நான்தான் பாலா’, வடிவேலு நடிப்பில் ‘தெனாலிராமன்’, சந்தானம் நடிப்பில் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

மற்றவர்கள் நகைச்சுவை நாயகனாக அவர்களது படங்களில் நடித்தாலும் விவேக் மட்டும் ‘நான்தான் பாலா’ படத்தில் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அது பற்றி சமீபத்தில் விஜய் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் விவேக் கூறியதாவது,

“கிட்டத்தட்ட 26 வருஷம் காமெடி பண்ணியாச்சி. அதை எல்லாரும் நல்லா ரசிச்சிட்டாங்க. இன்னொரு பிளாட்பார்ம் டிரை பண்ணலாம்னு ஆசையா இருந்தது.

இப்ப எது வேணா சினிமாவுல நடக்கலாம், யாரு வேணா நடிக்கலாம். எல்லா எக்ஸ்பரிமென்ட்டையும் தாங்கிக்கிற சக்தி, பொறுமை ஆடியன்சுக்கு வந்திருக்கு.

இப்படி கூட நாம டிரை பண்ணலைன்னா, எப்படி டிரை பண்ண முடியும். அதனாலதான் ‘நான்தான் பாலா’ படத்துல ஒரு  மெயின் கேரக்டர் பண்ணியிருக்கேன்.

சமீபத்துலதான் படத்தோட இசை வெளியீடு நடந்தது, பாலசந்தர் சார், பாரதிராஜா சார், மணிரத்னம் சார், ஏ.ஆர்.ரகுமான் சார் எல்லாருமே வந்திருந்தாங்க.

‘நான்தான பாலா’ படத்துல கம்ப்ளீட் சீரியஸ் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். படத்துல காமெடிலாம் இருக்கு. செல் முருகன் பண்ணியிருக்காரு, மயில்சாமி பண்ணியிருக்காரு, அம்மா கேரக்டர் பண்ணியிருக்கிற சுஜாதா மூலமா கூட காமெடி இருக்கு. ஆனால், நான் பண்ணலை.

படம் பார்த்துட்டு வெளிய வரும் போது ஷாக் ஆகி வருவாங்க. அந்த ஒரு கேரண்டி நான் கொடுப்பேன். ஒரு செகண்டு கூட தொய்வு இருக்காது. ஆனால், படம் பார்த்துட்டு வந்து இப்படிப்பட்ட ஒரு கேரக்டர் விவேக் பண்ணிட்டானே…சே…அப்படின்னு ஒவ்வொரு காமெடியனும் பொறாமைப்படுவாங்க,  இந்தியா லெவல்ல, ” என அவரது ‘நான்தான் பாலா’ கதாபாத்திரம் பற்றி பெருமை பொங்க சொன்னார் விவேக்.

Read Previous

எந்த நேரத்துல என்ன ஆகும்னு…நிம்மதியே இல்லை – வடிவேலு பேச்சு

Read Next

ஒரே படத்தில் அ, அ, அ, அ…