தணிக்கைக் குழுவுடன் மோதும் ‘நான் சிகப்பு மனிதன்’…

nsm-paper-ad‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இடம் பெற்ற விஷால், லட்சுமி மேனன் முத்தக் காட்சி, பரபரப்பான கடந்த சில நாட்களாக பேசப்பட்டது.

அந்தக் காட்சியை நீக்கினால் மட்டுமே படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கை அதிகாரிகள் கட்டாயமாகக் கூறி விட்டனர். அப்படி ‘யு’ சான்றிதழ் இல்லையென்றால் , தமிழக அரசு வழங்கும் வரி விலக்கைப் பெற முடியாது.

அதனால், படத்தை மீண்டும் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பினர். ஆனாலும், தணிக்கைக் குழு, அவர்களது பிடியை தளர்த்தவில்லை. எனவே, முத்தக் காட்சிதான்  முக்கியம் என முடிவெடுத்த தயாரிப்பாளர்கள், விஷால், இயக்குனர் திரு, அக்காட்சியை நீக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு ‘யுஏ’ சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

ஒரு படத்தின் தணிக்கை முடிந்தவுடன் அந்த படம் என்ன சான்றிதழைப் பெறுகிறதோ  அந்த சான்றிதழுடன்தான் படத்தின் விளம்பரங்களை, வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட வேண்டும்.

ஆனால், ‘நான் சிகப்பு மனிதன்’ குழுவினர் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்த பின்னும் ‘யுஏ’ என குறிப்பிடாமல், படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் இன்று வரை விளம்பரம் செய்து வருகின்றனர்.

மேலும், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக வாங்கிய ‘யுஏ’ சான்றிதழை விஷால் கையில் தூக்கிக் காட்டும்  ஃபோட்டோவை சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர். இது எதற்காக ?

தணிக்கைத் துறை இதையெல்லாம் கண்டு கொள்ளுமா ?

Read Previous

இசையா ? நடிப்பா ? – தவிக்கும் இசையமைப்பாளர்கள்…

Read Next

இயக்குனர் விஜய்யுடன் திருமணமா ? – அமலாபால் அறிக்கை