ரஜினிகாந்துக்கு மோடி நன்றி…

rajinikanth with modiஇந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் ட்விட்டர் மூலம் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த வாழ்த்துக்கு சற்று முன்னர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து ரஜினிகாந்த்துக்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.

‘உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. இந்த வெற்றி இந்திய மக்களின் வெற்றி. அவர்களின் நம்பிக்கைக்கும் ஆசைக்குமான வெற்றி,” தெரிவித்துள்ளார்.

ரஜினி, மோடிக்கு நேற்று வாழ்த்து தெரிவித்ததை அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக வெளியிட்டன.

அவருக்கு மோடி அளித்துள்ள இந்த பதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட வாய்ப்புள்ளது.

இன்று இதுவும் மிகப் பெரிய செய்தியாக ஊடகங்களில் வலம் வரும்.

 

Read Previous

தேர்தல் 2014 : நட்சத்திரங்களின் வெற்றி, தோல்வி…

Read Next

பேய் படம்னாலே வீட்டை சுத்திதான் கதை நகரும் – சுந்தர் .சி