விறுவிறுப்பான முன்பதிவில் ‘ஜுங்கா’

‘இதற்குத்தோனே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக் கூட்டணியான விஜய் சேதுபதி, கோகுல் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘ஜுங்கா’ படம் மூலம் இணைந்துள்ளது.

இந்தப் படத்தையும் கலகலப்பான நகைச்சுவைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.

விஜய் சேதுபதி படத்தில் டான் ஆக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக சாயிஷா, மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார்கள். கூடுதல் நகைச்சுவைக்கு யோகி பாபு இருக்கிறார்.

இந்த வாரம் வெளிவரும் படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக ‘ஜுங்கா’ படம் இருக்கிறது. அதனால், படத்திற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

Read Previous

விவசாய வளர்ச்சிக்கு 1 கோடி வழங்கிய சூர்யா

Read Next

சீமராஜா – வாரேன்…வாரேன்..சீமராஜா – பாடல் வரிகள் வீடியோ

Most Popular