சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதுகிறார்.
விவேக் இதற்கு முன் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இப்போது மீண்டும் ‘சர்கார்’ படத்திற்காக அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.
‘சர்கார்’ படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதற்கடுத்து வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாம்.
‘சர்கார்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதுவது பற்றி விவேக் கூறியிருப்பதாவது,
“சர்கார்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறேன். மாஸ்டர் ஏ.ஆர். ரகுமான் சாரிடமிருந்து கற்றுக் கொண்டு, அவருக்காக எழுதுவது ஒரு ஆசீர்வாதம்.
விஜய் சார் எனக்கு ஒரு தூணாக இருந்து ஆதரவு கொடுக்கிறார், அதற்காக அவருக்கு நன்றி. மிகவும் அன்பானவர்.
ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் வலுவான உள்ளடக்கத்திற்கு பணியாற்றுவது சிறப்பானது,” என்று அவர் கூறியிருக்கிறார்.