இன்று ஜுலை 4, 2014 ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகிறது. தொடர்ந்து பல வாரங்களாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்கள் வெளிவந்த நிலையில் இன்று ஒரே ஒரு படம் மட்டுமே வருவது ஆச்சரியமாக உள்ளது. ஆனால், வரும் வாரங்களில் இந்த நிலை மாறும் என்று தெரிகிறது.
இன்று வெளியாகியுள்ள ஒரே ஒரு படம் ‘அரிமா நம்பி’. வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிவமணி இசையமைப்பில் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.