‘மாஸ்’ – வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன்

surya and venkat prabhu‘பிரியாணி’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு  இயக்கும் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த படத்திற்கு ‘மாஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாக வெங்கட் பிரபு சற்று முன் அறிவித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சூர்யா , லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து முடித்தார். அதைத் தொடர்ந்து ‘மாஸ்’ படத்தில் நடிப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டார்.

இந்த படம் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

விமலுக்கு பகிரங்க கல்யாணம் செய்து வைத்த இயக்குனர்…

Read Next

நான் எப்பவுமே தளபதிதான்… அப்புறம்தான் சூப்பர் ஸ்டார் … – விஜய்

Most Popular