‘அஞ்சான்’ படத்தின் டீஸர் இரண்டு நாட்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர் என்று இன்று மாலை ஒரு விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
அதாவது, ‘யு டியூப்’பில் கண்டு ரசித்துள்ளவர்கள். ‘யு டியூப்’ என்பது இணையதள ஊடகத்தின் வழியே செயல்படும் ஒரு வீடியோ இணைய தளம். ‘யு டியூப்’ தளத்தில் ஒரு டீஸரோ, டிரைலரோ, பாடலோ, பேட்டியோ வெளியிட்டால் அதை இணைய தள ஊடகங்களின் மூலம்தான் எளிதில் இணையப் பெற்று கண்டு ரசிக்க முடியும்.
இணைய தள ஊடகங்களின் வழியேதான் தற்போது இம்மாதிரியான டிரைலர், டீஸர் ஆகியவை ரசிகர்களை வெகுவாகச் சென்றடைகிறது. அப்படியிருக்க இணைய தள ஊடகங்கள் இல்லாமல் அவற்றை நாளிதழ்கள் மூலமும், வார இதழ்கள் மூலமும் எப்படி கொண்டு சேர்க்க வாய்ப்பேயில்லை.
இதோ, இங்கே ‘அஞ்சான்’ டீஸரை நீங்கள் கண்டு ரசிக்கலாம். இதையே ஒரு நாளிதழில் பார்த்து ரசிக்க முடியுமா ?
இணைய தளம் வாயிலாகக் கிடைத்த வெற்றியை, இணைய தள இதழ்கள் இல்லாமல் எப்படி கொண்டு சேர்க்க முடியும் ?
வளர்ந்து வரும் ஊடக மாற்றத்தில் இணைய தளம் என்பதின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு சீக்கிரம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
