‘ஜிகினா’வில் ஜொலிக்க வரும் ஜான் பீட்டர்…

jigina music director john peter“மதுரை சம்பவம், போடி நாயக்கனூர் கணேசன், சொகுசு பேருந்து, கன்னியும் காளையும் செம காதல்,” போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜான் பீட்டர், தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் ‘ ஜிகினா’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அவர் இதுவரை பணியாற்றிய படங்கள் தமிழ் நாட்டின் கலாச்சார இசையயைப் பதிவு செய்வதாகவே அமைந்திருக்கிறது. ‘ஜிகினா’ படத்தின் மூலமும் அப்படிப்பட்ட இசையைப் பதிவு செய்ய உள்ளார்.

‘அவருக்கு இயற்கையாகவே ஒரு இயக்குனரின் உணர்வையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் மன நிலை இருக்கிறது , அவருடன் பணி புரிவது சிறந்த அனுபவம் ‘ என்று கூறுகிறார் ‘ஜிகினா’ இயக்குனர் நந்தா பெரியசாமி.

500க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களுக்கு இசை அமைத்து உள்ள ஜான் பீட்டர், லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னுடைய இசைப் பதிவு அறையில் ஒவ்வொரு நாளும் , புதிய நாளே. நான் எந்நேரமும் இசையைப் பற்றி மட்டுமே சிந்திப்பவன். நான் பெரும்பாலும் தென் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி இசை அமைத்தாலும் , என்னுடைய பலமும் ஆர்வமும் வித்தியாசமான இசை மீது தான். பல்வேறு இயக்குனர்களிடம் பணியாற்றி என்னுடைய இசைத் திறமையை வெளிக் காட்ட வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். தென்னகத்தின் இசைக் குயில் எஸ்.ஜானகி அவர்களுடன் ‘பூம் பூம்’ படத்துக்காக பணியாற்றியது என்னால் மறக்கவே முடியாது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜான் பீட்டர்.

Read Previous

Jyothika coming back with a remake film…

Read Next

விக்ரமைப் பார்த்து நடிப்பைக் கற்ற ‘சரபம்’ சலோனி…

Most Popular