கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘விஸ்வரூபம் 2’. முதல் பாகம் தயாரான போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளை கமல்ஹாசன் படப்பிடிப்பு நடத்திவிட்டார்.
ஆனாலும், படத்தை முதல் பாகம் வெளியான பின் குறுகிய இடைவெளிக்குள் வெளியிடாமல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக காலம் கடத்தி வருகிறார்கள். இதனிடையே கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
இதனால் எந்தப் படம் முதலில் வெளிவரும் என்ற குழப்பநிலை நீடித்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹசான் அதை தெளிவுபடுத்திவிட்டார். ‘உத்தம வில்லன்’ படம்தான் முதலில் வெளிவருமாம். அதன் பின்னரே ‘விஸ்வரூபம் 2’ வரும் என அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உத்தம வில்லன் படமும் முழுக்க முழுக்க காமெடி கதை கிடையாதா, ஆனால் படத்தில் ஜாலியான பல விஷயங்கள் உண்டு என்கிறார். இந்தப் படம் வெளியான சில மாதங்கள் கழித்து ‘விஸ்வரூபம் 2’ வெளியாகுமாம்.
கமல்ஹாசன் அடுத்த மாதம் முதல் ‘த்ரிஷயம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக வாய்ப்புள்ளது. ஆக, அடுத்தடுத்து கமல்ஹசான் நடிக்கும் படங்கள் வெளியாக உள்ளன. ‘உத்தம வில்லன்’ இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது.