கேரளாவில் 200 தியேட்டர்களில் ‘கத்தி’…

kaththi kerala release newsகேரள நாட்டு ரசிகர்கள் விஜய்யை இனி ‘என்டே விஜய்’ என்று சொல்லுவார்கள் போலிருக்கிறது. விஜய் நடித்து வெளியான கடந்த சில படங்களால் அவருக்கு கேரளாவில் பல இளைஞர்கள் விஜய் ரசிகர்களாகவே மாறிவிட்டார்களாம். சில வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்றிருந்த போது கூட நாமே அதைக் கண்ணால் பார்த்தோம்.

தமிழ்நாட்டைப் போலவே அங்கும் அவருடைய படத்திற்கு அப்படி ஒரு கூட்டம். வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு விஜய்க்கு கேரளாவில் சமீப காலமாக கிடைத்திருப்பதை அங்குள்ள திரையுலகினரே ஆச்சரியத்தில் பார்க்கிறார்களாம்.

அதை விஜய்யும் நன்றாகப் புரிந்து கொண்டு கடைசியாக நடித்த ‘ஜில்லா’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை தன்னுடைய அப்பாவாக நடிக்க வைத்தார்.

தற்போது கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ‘கத்தி’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம். அங்கு மட்டும் 200 தியேட்டர்களில் ‘கத்தி’ படம் வெளியாக உள்ளதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகர் படமும் இந்த அளவிற்கு வெளியானதில்லை என்கிறார்கள்.

மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு அடுத்து விஜய் நடிக்கும் ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பா என்று மற்ற மலையாள நடிகர்களும் வியப்பாகத்தான் பார்க்கிறார்களாம்.

விஜய் நேரடி மலையாளப் படத்தில் நடித்தால் அவருக்கு அங்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள்.

Read Previous

Shah Rukh Khan Receives Global Diversity Award

Read Next

‘Bang Bang’ crosses 200 crore mark

Most Popular