2017ம் ஆண்டு வெளிவந்த படங்களில் பலராலும் பாராட்டப்பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’.
இளம் இயக்குனரான ஸ்ரீகணேஷ் அந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்போது அதர்வா நடிக்க உள்ள ‘குருதி ஆட்டம்’ படத்தை அவருடைய இரண்டாவது படமாக இயக்க உள்ளார்.
ராக்வோர்ட் என்டர்டெயின்மென்ட் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்1 ஐ.பி. கார்த்திகேயன் இப்படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது,
“இந்தப் படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாக உள்ளது. ஒரு த்ரில்லர் கதை. ஒரு வெற்றிப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும்.
நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தி வரும் அதர்வாவின் முழு திறமைக்கும் தீனி போடும் படமாக இந்தப் படம் அமையும். கதாநாயகி தேர்வு நடை பெற்று வருகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது,” என்கிறார்.