இந்த வாரமும் இத்தனை படங்களா…?

kaaviya thalaivan release ad2014ம் ஆண்டை ‘ரிலீஸ் ஆண்டு’ என்றுதான் சொல்ல வேண்டும். 1980களில்தான் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

ஆனால், இந்த ஆண்டு இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது வருட முடிவில் 200ஐ நிச்சயமாகத் தாண்டி விடும்.

வாரா வாரம் சராசரியாக ஐந்து படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. இந்த வாரம் வரும் வெள்ளிக் கிழமையன்றும் சுமார் 9 திரைப்படங்கள் வெளிவரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நேற்றைய பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும் போது உங்களுக்கும் அது புரிந்திருக்கும்.

“காவியத் தலைவன், விஞ்ஞானி, மொசக்குட்டி, ஆ, அழகிய பாண்டியபுரம், வேல்முருகன் போர்வெல்ஸ்,  புளிப்பு இனிப்பு, மனம் கொண்ட காதல், ர” ஆகிய 9 திரைப்படங்கள் இந்த வாரம் வெளிவர உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

நீண்ட நாட்கள் கழித்து ஒரே வாரத்தில் ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியாக உள்ளது ஆச்சரியமான விஷயம்தான். இந்தப் படங்களுடன் இந்த வார இறுதியில் தமிழில் இந்த ஆண்டு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 190ஐக் கடந்து விடும்.

Read Previous

பொங்கலுக்கு எத்தனை படங்கள்…?

Read Next

எப்படியெல்லாம் படத்தை ஓட வச்சேன்…‘கலங்கும்’ பவர்ஸ்டார்…