ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் முதல் முறையாக இசையமைப்பாளர் அனிருத் இணைந்த படம் ‘கத்தி’.
இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி இசை ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ‘செல்ஃபி புள்ள…’ பாடல் அடிக்கடி கேட்கப்படும் பாடலாக அமைந்தது.
குறுகிய காலத்திலேயே தமிழ்த் திரையுலகில் முன்னணி இடத்தைப் பிடித்த அனிருத் இசையமைத்த ‘கத்தி’ படம், ஆப்பிளின் ‘ஐ-டியூன்ஸ்’-ல் அதிகம் விற்பனையான இந்திய ஆல்பம் என அந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனிருத் இந்த நாள் மகிழ்ச்சியான நாள் என கருத்து தெரிவித்துள்ளார்.
அனிருத், தற்போது “காக்கிச் சட்டை, நானும் ரௌடிதான், ஆகோ, ரங்கூன், மாரி” ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தமிழ்த் திரைப்படம் ஒன்று இந்திய அளவில் இந்த சாதனையைப் புரிந்திருப்பது பாராட்டுக்குரியது.