டிசம்பர் 31 ’என்னை அறிந்தால்’ – இசை வெளியீடு…

yennai arindhaal audio launch newsகௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் 31ம் தேதி நள்ளிரவு வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி ‘மின்னலே’ படத்திலிருந்து தொடர்ந்து பல படங்களில் வெற்றிகரமான கூட்டணியாக இருந்தது. அதன் பின் அவர்களிருவருக்கும் பிரச்சனை ஏற்பட கௌதம் மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானையும், ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்கு இளையராஜாவையும் இசையமைக்க வைத்தார்.

‘வாரணம் ஆயிரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் அந்தக் கூட்டணி ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் இணைந்துள்ளது. அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.

‘என்னை அறிந்தால்’ பாடல் புத்தாண்டு பிறக்கும் அந்த நொடியில் வெளியிடப்பட உள்ளது. ஆக, அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டுக் கொண்டாட்டம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களுடன் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

Vijay Tv – Christmas 2014 – Speical Programmes…

Read Next

கே.பாலசந்தர் மறைவு – கமல்ஹாசன் இரங்கல் – வீடியோ