2014ம் ஆண்டில் மதன் கார்க்கி…

madhan karkyதிரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி 2014ம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் பலரையும் கவர்ந்த பாடலாக அமைந்துள்ளன.

செல்ஃபி புள்ள… (கத்தி), மாஞ்சா… (மான்கராத்தே), பேங்..பேங்க..(அஞ்சான்) ஒருத்தி மேல… (ஜீவா), நீ என்ன பெரிய அப்பாடக்கரா (என்னமோ ஏதோ), சரிதானா… (அமரகாவியம்), என் நெஞ்சில்… (நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா.. (லிங்கா), போன்ற பாடல்கள் ஹிட் பாடலாக அமைந்துள்ளன.

பாடல்கள் மட்டும் எழுதாமல் நான்கு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். 2014ம் ஆண்டில் தன்னுடைய திரையுலகப் பயணம் பற்றி மதன் கார்க்கி கூறியதாவது,

“திரையுலகில் ஓர் எழுத்தாளனாக நான் அடியெடுத்து வைத்து 5 ஆண்டுகள் நிறைவுறுகிறது. என் இந்தப் பயணம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நீங்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கும், விமர்சனங்களுக்கும் நன்றி. எனக்கு சூழலும், சுதந்திரமும் தந்த என் இயக்குனர்களுக்கும், என் வரிகளுக்கு உருவம் தந்த இசை அமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி. இன்னும் அழகான, தரமான பாடல்களோடு வரும் ஆண்டும் அமையும் என்று நம்புகிறேன்”, என்கிறார் மதன் கார்க்கி.

 

Read Previous

2014 – தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

Read Next

2014-ம் ஆண்டிலும் முதலிடத்தில் நா.முத்துக்குமார்…

Most Popular