இரண்டு வருட உழைப்பில் வெளிவரும் இமைக்கா நொடிகள்

கேமியோ பிலிம்ஸ் சிஜே. ஜெயகுமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில், நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’.

‘டிமாண்டி காலனி’ படத்திற்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கும் இரண்டாவது படம். ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லார் ஆக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அப்போது படம் பற்றி இயக்குனர் அஜய் கூறியதாவது

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுமே மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், நான் தான் கத்துக்குட்டி. அவர்களுடன் வேலை பார்த்தது ஒரு ஜாலியான, நல்ல அனுபவம்.

ஒரு படத்தின் வெற்றி 50 சதவீதம் திரைக்கதையிலும், நடிகர்கள் தேர்வில் 25 சதவீதமும், மீதி சதவீதம்தான் படப்பிடிப்பில் செய்ய வேண்டியதாகவும் இருக்கும் என என் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்வார். அதனால் தான் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடன் உட்கார்ந்து சண்டை போட்டு திரைக்கதையை எழுதினோம்.

2013ல் அதர்வாவிடம் இந்தக் கதையை சொன்னேன், அவரும் ஓகே சொன்னார். ஆனால் முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது தொடங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து இப்போது தான் படமாக வந்திருக்கிறது.

அதர்வா என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன். ஆதி ரொம்பவே பாஸிடிவ்வான மனிதர், நமக்கு தன்னம்பிக்கையை விதைத்து விடுவார். தயாரிப்பாளர் செய்த எல்லா விஷயங்களுமே படத்தின் மெருகேற்றலுக்காக உதவியது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது,” என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தை பல கடினமான உழைப்பிற்குப் பிறகு எடுத்து முடித்திருக்கிறார்கள். ஹாங்காங்கிலிருந்து வரவழைக்கப்பட்ட சண்டைக் கலைஞர்கள் மூலம் சேசிங் உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்திய சினிமாவில் நிச்சயம் இந்தப் படம் ஒரு ஹாலிவுட் படம் போல இருக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

Read Previous

Kanaa – Official Teaser

Read Next

கனா, நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன்