‘36 வயதினிலே’ – 6ம் தேதி இசை வெளியீடு…

சூர்யாவின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள ’36 வயதினிலே’ படத்தின் இசை வெளியீடு நாளை மறுநாள் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஹௌ ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக்கான ’36 வயதினிலே’  படத்தை மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் தமிழிலும் இயக்கியுள்ளார்.

சூர்யா தயாரிப்பில் அவருடைய மனைவி ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளதால் இந்தப் படத்திற்கும், இசைக்கும் நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கெனவே, படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையைமத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு, ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

Read Previous

Ok Kanmani – Songs – Play List

Read Next

Uttama Villain – Trailer