ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சாந்தகுமார்

அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ் மற்றும் பலர் நடிக்க 2011ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மௌன குரு’.

ஒரு அற்புதமான த்ரில்லர் கதையாக வெளிவந்த படம் ‘மௌன குரு’. தன்னுடைய அறிமுகப் படத்திலேயே அதிகம் பேசப்பட்ட இயக்குனரானார் சாந்தகுமார்.

சாந்தகுமார் இயக்கிய ‘மௌன குரு’ படத்தைத்தான் சில மாற்றங்களுடன் இப்போது ஹிந்தியில் ‘அகிரா’ என்ற பெயரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

நான்கு ஆண்டுகளாக வேறு எந்தப் படத்தையும் இயக்காத சாந்தகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய அறிவிப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே வெளியிட்டுள்ளது.

படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில்…

Read Previous

பா.விஜய் இயக்கத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி’….

Read Next

Masss – Therikkudhu Masss – Full Song With Lyrics – Video

Most Popular