உலக அளவில் வெளியாகும் ‘காக்கா முட்டை’

இரண்டு தேசிய விருதுகள், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் அற்புதமான வரவேற்பு என பெருமை பெற்றுள்ள ‘காக்கா முட்டை’ திரைப்படம் உலக அளவில் பல நாடுகளில் வெளியாக உள்ளது.

இத் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாட்டு வினியோகஸ்தர்கள் மட்டுமல்லாது உலக அளவிலும் பலர் முன் வந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல புதிய நாடுகளிலும் கூட இப்படத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அங்கெல்லாம் முதல் முறையாக 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்  இப்படம் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள் படங்கள் கூட வெளிவராத பல நாடுகளில் இப்படத்தை சர்வதேச அளவில் திரையிட உள்ளார்கள்.

இந்தியாவிலும், மலேசியா, சிங்கபூர் உள்ளிட்ட நாடுகளிலும் இப்படம் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாக உள்ளது.

 

Read Previous

Haiku – Official Teaser

Read Next

Rajini Murugan – Yennamma….Song – Making Video

Most Popular