விஜய் நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாடலைப் பாடி விடுவார். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஹிட் லிஸ்ட்டில் மட்டுமே இடம் பிடிக்கும்.
கடந்த சில படங்களாக அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பாடலாக இருந்தது. ‘துப்பாக்கி’ படத்தில் ‘கூகுள்…கூகுள்…’ பாடலும், ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா…வணக்கங்கன்னா…’ பாடலும், ‘கத்தி’ படத்தில் ‘செல்ஃபி புள்ள…’ பாடலும் பாடினார். இந்தப் பாடல்கள் அனைத்துமே ஹிட் பாடலாக அமைந்தன.
அதனால், அவருடைய ரசிகர்கள் ‘புலி’ படத்திலும் விஜய் பாட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று ‘புலி’ படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.