தமிழ்த் திரையுலகில் அடுத்த பெரிய எதிர்பார்ப்பாகப் பார்க்கப்படும் படம் ‘ரஜினி முருகன்’.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தையடுத்து இயக்குனர் பொன்ராம், நாயகன் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இமான், நகைச்சுவை நடிகர் சூரி மீண்டும் இணைந்துள்ள படம் ‘ரஜினி முருகன்’.
முன்னாள் தமிழ் நடிகையான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே இந்தப் படத்தின் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ பாடல் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று இப்படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ஐ-டியுன்ஸ்-ல் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அடுத்த மாதம் 17ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.