மாபெரும் வெற்றி பெற்ற “மைனா, சாட்டை, மொசக்குட்டி” படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்து வரும் ‘சவுகார்பேட்டை’.
ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, சரவணன், விவேக், அப்பு குட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய், ரேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது,
‘சவுகார் பேட்டை’ படம் இது வரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படம்.
இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக மூலக்கொத்தளம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரும் ஐம்பது பேய்களுடன் அதிரடியாக மோதும் படு பயங்கர சண்டைக் காட்சி படமாக உள்ளது.
எட்டு காமிராக்கள் கொண்டு பத்து நாட்கள் இந்த சண்டைக் காட்சியை கணல் கண்ணன் படமாக்குகிறார். அதிரடியான பேய்ப் படமாக ‘சவுகார் பேட்டை’ உருவாகிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் இயக்குனர். வடிவுடையான்.