படப்பிடிப்பில் காயம், தொடர்ந்து நடித்த அஜித்…

‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித் தற்போது ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது திடீரென அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அஜித்துக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள். டாக்டர்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு முழுமையாக ஓய்வு எடுக்கும்படி அஜித்திடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், படப்பிடிப்பை ரத்து செய்து ஓய்வெடுத்தால் தயாரிப்பாளருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று சொன்ன அஜித், அரை மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்து விட்டு, தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

அஜித்தின் சின்சியாரிட்டியைக் கண்டு யூனிட்டே நெகிழ்ச்சியடைந்து போய் நின்றதாம்.

Read Previous

Vizhithiru – Stay Awake… – Song Promo

Read Next

Bhumi helping for ‘Kakka Muttai’ Heroes…