‘புலி’ டீசர், 2 நாளில் 20 லட்சம் ஹிட்ஸ்…

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘புலி’ படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன் யு டியூபில் வெளியிடப்பட்டது.

வெளியான இரண்டு தினங்களுக்குள் இந்த டீசர் 20 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் இந்த டீசரைப் பார்த்துள்ளனர். அது அப்படியே இன்றும் தொடர்வது பெரிய விஷயம்தான்.

சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 42,000 பேர் இந்த டீசரைப் பார்த்து வருகிறார்கள். இன்று காலை 10 மணியளில் 19,90,000 ஆக இருந்த ஹிட்ஸ் தற்போது 20,31,000 ஆக இருக்கிறது.

இந்த டீசரை தென்னிந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் பாராட்டி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, சாந்தனு, சிபிராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, விவேக், கன்னட நடிகர் யாஷ், நடிகைககள் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், நஸ்ரியா, குஷ்பூ, ராதிகா சரத்குமார், இயக்குனர்கள் ஹரி, வெங்கட்பிரபு, அட்லீ, சுசீந்திரன், மனோபாலா, பாலாஜிமோகன், தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி தாணு, ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், யூடிவி தனஞ்செயன், ஏ.ஜி.எஸ். அர்ச்சனா கல்பாத்தி, ஜெ.அன்பழகன், சிவசக்தி பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத், இமான் ஆகியோர் ‘புலி’ டீசரைப் பாராட்டியுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் சரித்திரப் படம் பார்த்து சில வருடங்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.

 

Read Previous

‘Pugazh’ audio to be released on July 3rd…

Read Next

Papanasam – Yeya En Kottikkaaraa – Video Song