2.0 டீசரின் மகத்தான புதிய சாதனை

ஒரு தமிழ்த் திரைப்படத்தின் டீசர் சாதனை இந்திய அளவில் மிகப் பெரும் சாதனையாக அமைந்து வருவது தமிழ்த் திரையுலகத்திற்கான பெருமையானதொரு சாதனை.

வினாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணிக்கு ‘2.0’ படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி உடனுக்குடன் சாதனைகளைப் படைக்க ஆரம்பித்தது.

யு டியூபில் மட்டும் தற்போது வரை இந்த டீசர் ஏற்படுத்தியுள்ள சாதனைகள்…

Views – பார்வைகள்

தமிழ் டீசர் – 1 கோடியே 48 லட்சம் பார்வைகள்
தெலுங்கு டீசர் – 67 லட்சம் பார்வைகள்
ஹிந்தி டீசர் – 2 கோடியே 68 லட்சம் பார்வைகள்

Likes – விருப்பம்

தமிழ் டீசர் – 5 + லட்சம்
தெலுங்கு – 2.48 லட்சம்
ஹிந்தி – 7 + லட்சம்

பேஸ்புக்

தமிழ் டீசர் – 6,84,000
தெலுங்கு டீசர் – 72,000
ஹிந்தி டீசர் – 51,00,000

இவை தவிர்த்து இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 42 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன.

மொத்தத்தில் தமிழ் டீசர் 1 கோடியே 54 லட்சம், தெலுங்கு டீசர் 67.7 லட்சம், ஹிந்தி டீசர் 3 கோடியே 19 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ள. மூன்று மொழிகளுக்கும் சேர்த்து 5 கோடியே 80 லட்சம் பார்வைகளை இந்த டீசர் பெற்றுள்ளது.

லைக்குகளில் யு டியுபில் மட்டுமே 14 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஆனாலும், தமிழில் ‘மெர்சல்’ டீசர் யு டியூபில் பெற்றுள்ள 10 லட்சம் லைக்குகளை ‘2.0’ டீசர் இன்னும் கடக்கவில்லை.

Read Previous

கொரில்லா – டீசர்

Read Next

சாமி ஸ்கொயர் – புது மெட்ரோ ரயிலு….பாடல் வீடியோ

Most Popular