எம்.எஸ்.விக்கு இளையராஜா நடத்தும் இசை அஞ்சலி

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘என்னுள்ளே எம்.எஸ்.வி.’ என்ற இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்த உள்ளார்.

வரும் 27ம் தேதி, சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறியதாவது,

“எம்.எஸ்.விஸ்வநதன் அண்ணனின் இசைத் திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்து காட்ட இருக்கிறேன்.

எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

நம் உயிரை எங்கோ அழைத்துச் செல்லுகின்ற உணர்வை கொண்டு வருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல, இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்.

அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்,” என்றார் இளையராஜா.

இந்த இசை நிகழ்ச்சி ஜீவா – இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட உள்ளது.

Read Previous

‘சகலகலா வல்லவன்’ இன்று இசை வெளியீடு

Read Next

Happy birthday Thaman