தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் விஜய் தேவரகொன்டா.
தமிழில் ‘நோட்டா’ படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 5ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொன்டா கலந்து கொண்டுள்ளார்.
இன்று இரவு 9 மணிக்கு அல்லது நாளை இரவு 9 மணிக்கு விஜய் தேவரகொன்டா பங்கேற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும்.
கமல்ஹாசனுடனும் விஜய் தேவரகொன்டா உரையாற்றியுள்ளார், வீட்டிற்குள்ளும் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.