விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று முடிவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் கலந்து கொண்டு, ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
கடைசியில் ரித்விகா இறுதிப் போட்டியில் வென்று 50 லட்ச ரூபாய் பரிசை வென்றார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற மகத், ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, மற்றும் முதல் சீசனில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண், ஆகியோருடன் சிம்பு நேற்று சென்னையில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்த்தார்.
இது பற்றிய தகவலை ஜனனி அவருடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்த பின்னும் அதில் கலந்து கொண்டவர்கள் அவர்களுடைய நட்பைத் தொடர்வது சிறப்பு.
About last night! #CCV pic.twitter.com/oOUYdxY7Ni
— Janani (@jananihere) October 3, 2018