சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பேட்ட’.
இப்படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ‘லீக்’ ஆகின. ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அந்த வீடியோவை வைத்து சில செய்தித் தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிட்டன.
அது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ‘பேட்ட’ பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
“பேட்ட’ குழுவிடமிருந்து ஒரு தாழ்மையான வேண்டுகோள். ‘லீக்’ ஆன படப்பிடிப்புப் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்வு செய்யாதீர்கள். உங்கள் ஆதரவு வேண்டும்.
தந்தி டிவி போன்ற டிவிக்கள் கூட அந்த வீடியோவை செய்தியாக வெளியிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்து அவர்கள் பைரசி படங்களை செய்தியாக வெளியிடுவார்களோ ?, முழுமையாக முறையற்ற செயல்,” இது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘சர்கார்’ படக் குழுவினர் யாரும் பேட்டிகளைத் தரக் கூடாது. அப்படி தந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் ஏஆர். முருகதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kind request from #Petta team.. Pls do not share leaked stills or videos from shooting Spot..Need all your support 🙏
Shocked to see channels like @ThanthiTV are publishing leaked video as news.Guess next they would even telecast pirated movies as news… Completely Unethical..
— karthik subbaraj (@karthiksubbaraj) October 8, 2018