உன்னைப் பார்த்ததால பசியே இல்ல…

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்த ‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தயாரிக்கும் படம் ‘அச்சமின்றி’.

விஜய் வசந்த் நாயகனாக நடிக்க நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, கருணாஸ், ராதா ரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய், இவர்களுடன் வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் நடிக்கிறார்கள்.

‘‘என்னமோ நடக்குது’ படம் எப்படி கதையோடு கமர்ஷியல் கலந்து சொல்லப்பட்டதோ அது மாதிரி ‘அச்சமின்றி’ படமும் அழுத்தமான கதையை உள்ளடக்கியது. செம ஸ்பீடான திரைக்கதையாக படம் பரபரப்பாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.

சமீபத்தில் இப்படத்திற்காக விஜய் வசந்த் – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற

‘உன்னை பார்த்ததால…பசியே இல்ல, படுத்தாலும் கூட விழி மூடல…’ என்ற பாடல் காட்சி பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Read Previous

KO 2 – Kohila… – Song Promo

Read Next

KO 2 – Kannamma… – Song Promo