கலையரசன், புதுமுகம் ரமீஸ் ராஜா, புதுமுகம் மாயா, காளி வெங்கட், அர்ஜுன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த், ‘மெட்ராஸ்’ ஜானி, ஆகியோர் நடிப்பில் சதீஷ் சந்திரசேகர் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘ஜின்’.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ‘டார்லிங்’ படம் மிகப் பெரும் வெற்றி பெற்றதால் ‘ஜின்’ படத்திற்குப் பொருத்தமான டைட்டிலாக ‘டார்லிங் 2’ என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.
‘ இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே நடிகரோ , அதே இயக்குனராக இருக்கவும் வேண்டாம். முந்தைய பாகத்தின் கதைக் கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம்.
ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படுத்தும் குழப்பத்தை, நகைச்சுவையுடன், காதலும் கலந்து கொடுத்து இருக்கிறார் புதிய இயக்குனர் சதீஷ் சந்திரசேகர். இந்தக் கதைக்கு ‘டார்லிங் 2’ தலைப்பு நன்றாக இருக்கும் என்பதை படம் பார்த்த ஒரு நொடியில் தீர்மானித்தேன். ‘டார்லிங் 2′ அனைத்துத் தரப்பு மக்களையும் சென்று அடையும் என்பதில் சந்தேகமே இல்லை,’’ என்கிறார் ஞானவேல் ராஜா.
‘டார்லிங் 2’ – அக்டோபர் மாதம் 21ம் தேதி வெளியாக உள்ளது.