ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘மெல்லிசை’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சாம்.
சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டிருந்தவர், மூணாறிலிருந்து சென்னைக்கு வந்த இவர் தன்னுடைய சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு இசையமைப்பாளராக மாறினாராம். அதன் பின் விளம்பரப் படங்கள், ஆல்பங்கள் ஆகியவற்றிற்கு இசையமைத்திருக்கிறார்.
மெல்லிசை திரைப்படம் இசையை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் புதிய இசை தேவைப்பட்டதால் சாம் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டு ‘மெல்லிசை’ படத்தின் தன்னை அறிமுகப்படுத்துவதாக சாம் சொல்கிறார்.
“அறிமுக இசையமைப்பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பாக இசையை மையமாக அதிலும் மெல்லிசை என பெயரிடப்பட்ட அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமானது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாடல் வெளியானது முதல் பல பிரபலங்கள் என்னை அழைத்து பாரட்டி வருகிறார்கள். முதல் திரைப்படத்திலேயே பிரபல பின்னனி பாடகர்கள் பாடியுள்ளார்கள். ஹரிஹரண், ஷ்ரேயா கோஷல், ஹரினி, ஸ்ரீனிவாஸ், ஆண்ட்ரியா, ஹரிசரண் என ரசிகர்களின் அபிமான பாடகர்கள் ‘மெல்லிசை’ படத்தில் பாடியுள்ளார்கள்.
முழுக்க முழுக்க நேரடியாக இசைக்கருவிகளை உபயோகப்படுத்துவது, ஒரு பாடலை இசையமைக்கும்போது யாருடைய தழுவலும் இல்லாத வகையில் புதிதாக இசையமைப்பதுமே என்னுடைய தனித்துவம். திரைக்கு வந்தப்பின் இன்னும் 100 மடங்கு மெல்லிசை பாடல்கள் மக்களுக்கு பிடிக்கும் ,” என்கிறார் சாம்.
ஒரு குறிப்பிட்ட திரைப்பட ஆல்பமில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே அனைவருக்குமான விருப்ப பாடல்களாக அமையும் ஆனால் மெல்லிசையை பொருத்த வரை தீம் மற்றும் ஒரு ஆங்கில பாடல் உட்பட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சாம் தற்போது ஒரு மலையாளப்படம் உட்பட மொத்தம் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.