மலேசியாவில் ரஜினிகாந்த்

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் மலேசியா சென்றடைந்த போது அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்திலேயே திரளான ரசிகர்கள் திரண்டு வந்து ரஜினிகாந்த்தை வரவேற்றனர்.

அங்கு சுமார் ஒரு மாத காலம் அவர் ‘கபாலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அதன் பின் சென்னையில் கடைசி கட்டப் படப்பிடிப்புடன் படம் முடிவடைகிறது.

‘கபாலி’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் முழுவதுமே வயதான தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்று தெரிகிறது.

இப்படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read Previous

Sivakarthikeyan movie on floors

Read Next

Lakshmi Ramakrishnan issues legal notice to Vijay TV