கேரளா – வெளியீட்டிற்கு முன்பே ‘சர்கார்’ 3 கோடி வசூல்

தமிழ் சினிமா நடிகர்களிலேயே விஜய்க்கு தான் கேரளாவில் தனிப் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இளைஞர்கள், இளைஞிகள் என விஜய் படம் வந்தாலே அதை ஒரு திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள் அவர்கள்.

விஜய் நடித்து தீபாவளிக்கு வர உள்ள ‘சர்கார்’ படத்தை அவர்கள் மிகப் பெரும் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

கொல்லத்தில் விஜய்யின் 175 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 402 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. மொத்தம் 1700 காட்சிகள்.

300க்கும் அதிகமான ரசிகர் மன்ற காட்சிகள், 25 பெண் ரசிகைகளுக்கான காட்சிகள். 24 மணி நேரமும் தொடர்ச்சியாக காட்சிகள் என கேரளாவில் மலையாள நடிகர்களின் படங்களுக்கு இல்லாத வரவேற்பு இந்த ‘சர்கார்’ படத்திற்கு இருக்கிறது.

வெளியீட்டிற்கு முன்பாகவே கேரளாவில் ‘சர்கார்’ படம் 3 கோடியை வசூலித்துவிட்டது.

இது பற்றிய தகவலை கேரள மாநில ‘சர்கார்’ உரிமையை வாங்கியுள்ள இபார் இன்டர்நேஷனல் அவர்களது டிவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

Read Previous

ரீமேக் படத்தில் நடிப்பது சவாலானது – ஜோதிகா

Read Next

சர்கார் – விமர்சனம்

Most Popular