தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட்ங்களை கஜா புயல் பலமாகத் தாக்கியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புயலுக்குப் பின் நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மக்கள் தவிப்புடன் சொல்லி வருகிறார்கள்.
கேரளா புயலுக்குக் கூட உடனடியாக உதவிகளை அறிவித்த தமிழ் நடிகர்கள், இந்த கஜா புயலுக்கு மட்டும் உதவிகளை அறிவிக்க மிகவும் தாமதப்படுத்தி உள்ளார்கள்.
இன்று காலைதான் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாயை நிவாரண உதவியாக அறிவித்தனர். அதற்கடுத்து விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய்க்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதாக அறிவித்தார்.
சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாயும், நிவாரணப் பொருட்களை வழங்க 10 லட்ச ரூபாயும் என 20 லட்ச ரூபாயை அறிவித்துள்ளார்.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் இதுவரை அவர்களது நிவாரண உதவி பற்றி எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அஜித் எது நடந்தாலும் இதுவரை உதவி செய்ததில்லை. தமிழ்நாட்டில் முதல்வராக ஆசைப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் கூட அறிவிக்காதது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.