24 மணி நேரத்திற்குள் ‘தெறி’ டீசர் புதிய சாதனை

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது.

வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே லட்சக் கணக்கான பார்வையாளர்கள் இந்த டீசரைப் பார்த்தனர். அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்தன.

ஆனால், திடீரென காலையில் கொஞ்ச நேரம் இந்த டீசர் யு டியூபில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் வந்தது.

டீசர் வெளியாக 24 மணி நேரம் முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் நிலையில் ‘தெறி’ டீசர் இந்தியாவிலேயே அதிக லைக்குகள் வாங்கிய டீசர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை ‘வேதாளம்’ டீசர்தான் அதிக லைக்குகள் வாங்கிய சாதனையை வைத்திருந்தது.

தற்போது அந்த சாதனையை ‘தெறி’ டீசர் முறியடித்துள்ளது. தற்போது (இரவு 11 மணி நிலவரப்படி) தெறி டீசர் 21 லட்சம் பார்வையாளர்களையும், 1,68,000 லைக்குகளையும்பெற்றுள்ளது.

ஹிந்தித் திரைப்படங்கள் கூட புரியாத ஒரு சாதனையை ‘தெறி’ டீசர் புரிந்துள்ளது.

Read Previous

Bala exclusive interview about ‘Irudhi Suttru’

Read Next

Saagasam – Review

Most Popular