இயக்குனர் ரமேஷ் செல்வன் நடத்தும் குறும்படத் திருவிழா

விஜயகாந்த் நடித்த ‘உளவுத் துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’, மற்றும் ‘தலைவன், வஜ்ரம்’ போன்ற படங்களை இயக்கிய S.D.ரமேஷ்செல்வன் ‘குறும்படத் திருவிழா’ ஒன்றை நடத்த உள்ளார்.

இந்தத் திருவிழாவில் R.அரவிந்தராஜ், R.S.இளவரசன், J.பன்னீர், N.நாகராஜ், நந்தகுமார், R.P.ரவி, கட்டபொம்மன், ரவி நிவேதன், பாண்டி செல்வம் போன்ற திரைப்படக்கல்லூரி இயக்குநர்களும், N.ராகவ், சேவிலோ ராஜா, P.சந்திரன் போன்ற ஒளிப்பதிவாளர்களும், சித்திரைச் செல்வன், T.R.ரவிச்சந்திரன், R.சங்கர், K. சிவசங்கர் ஆகிய தயாரிப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.

“இந்தக் குறும்படத் திருவிழா போட்டியில் கலந்து கொள்ளும் 100 படங்களிலிருந்து 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாநில, மத்திய, சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விருது போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேலும் திரையரங்குகள் மற்றும் தொலைகாட்சிகளில் குறும்படங்களை வெளியிடப்படும்.

சிறந்த படங்களை எடுத்தவர்களுக்கு ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் நிறுவனத்தால் திரைப்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கான ஒரு அமைப்பாக ‘சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி’ செயல்படும் என்கிறார் இயக்குநர் S.D.ரமேஷ்செல்வன்.

Read Previous

24 posters make it big

Read Next

சீ.வி.குமார் இயக்கத்தில் ‘மாயவன்’

Most Popular