பிரபு, உதயா நடிக்கும் ‘உத்தரவு மகாராஜா’

ஸ்டார் விஷன் சார்பாக கணேஷ் குமார் தயாரிக்க ஆசிப் குரைஷி இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘உத்தரவு மகாராஜா.

இப்படத்தில் உதயா மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபு இதுவரை நடித்திருக்காத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ‘திருநெல்வேலி’ படத்திற்குப் பிறகு பிரபுவுடன் இணைந்து உதயா நடிக்கும் படம் இது.

பிரத்யேகமாக உடலை மெலிய செய்தும் மொட்டை அடித்தும் தாடி வைத்தும் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் உதயா.

கோவைசரளா, ஸ்ரீமன், மன்சூரலிகான், மனோபாலா, அஜய் ரத்னம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடை வெளிக்குப் பின் குட்டி பத்மினி நடிக்க உள்ளார்.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற நடிக, நடிகையர் தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகும் ஆசிப் குரைஷி தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பல விளம்பரப் படங்களையும் இயக்கிக் கொண்டிருப்பவர். படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்ச்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை கலந்த சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பல இந்திப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.

புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார். பாடல்களை நா.முத்துகுமார் எழுதுகிறார். நடனத்தை சின்னி பிரகாஷ் அமைக்க, தயாரிப்பு நிர்வாகத்தை தேனி சங்கர் கவனிக்கிறார். எடிட்டிங் – டான் பாஸ்கோ, சண்டை பயிற்சி – தளபதி தினேஷ். மக்கள் தொடர்பு – நிகில்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் 24ஆம் தேதி கோவையில் தொடங்கி ஏப்ரல் 15 வரை ஊட்டியில் நடைபெற உள்ளது.

இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடை பெற உள்ளது.

Read Previous

Two to tango

Read Next

Miruthan – Review