‘விஸ்வாசம்’ – நயன்தாரா தான் நம்புங்க…புகைப்படங்களுடன்…

‘விஸ்வாசம்’ படத்தில் வழக்கம் போலவே அஜித் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் இன்னும் கூடுதலாக, கிடா மீசை, முகம் நிறைய தாடி என அனைத்துமே வெள்ளை முடியில் முகம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

அஜித் எப்படி நடித்தாலும் பரவாயில்லை, என அவருடைய படத்தை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. உண்மையிலேயே இது மிகவும் வித்தியாசமானதுதான்.

பிளாஷ்பேக்கில் மட்டும் அஜித் கொஞ்சம் இளமையுடன் வருகிறார். படத்தில் அவருக்கு இரண்டே இரண்டு தோற்றம் மட்டும்தான்.

ஆனால், நயன்தாராவுக்கு மொத்தம் மூன்று தோற்றம். டாக்டராக, திருமணமாகாத பெண்ணாக இளமையான ஒரு தோற்றம், அடுத்து அஜித் மனைவியாக, கிராமத்துப் பெண்ணாக, குழந்தைக்குத் தாயாக ஒரு தோற்றம், மூன்றாவதாக ஒரு கார்ப்பரேட் தொழிலதிபராக, பத்து வயது பெண்ணுக்கு அம்மாவாக ஒரு தோற்றம் என ஆச்சரியப்பட வைக்கிறார்.

டாக்டராக இருக்கிற நயன்தாரா, ஏன் கிராமத்துப் பெண்ணாகவே மாறிவிட்டார்கள் என கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது….

தோற்றத்தில் மட்டும்தானா நடிப்பிலும் நயன்தாராவிற்கு படத்தில் நிறைய ஸ்கோப் உள்ளது. அதனால்தானோ என்னவோ, படம் முடிந்ததுமே அவருடைய முன்னாள் மானேஜர் ராஜேஷை படத்தை வாங்க வைத்து தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்ய வைத்து லாபமும் பார்த்துவிட்டார்கள்.

[post_gallery]

Read Previous

தில்லுக்கு துட்டு 2 – டீசர் 2

Read Next

கடாரம் கொண்டான் – டீசர்