கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், கிஷோர், ஜான் விஜய், தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கபாலி’.
இப்படம் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் படத்தின் இசை வெளியீடு எப்போது நடக்கும், பட வெளியீடு எப்போது இருக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே ‘கபாலி’ படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தயாரிப்பாளர் தாணு, அவர் தயாரிக்கம் மற்றொரு படமான ‘தெறி’ படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.
தற்போது, ‘கபாலி’ படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மே மாதம் 27ம் தேதி படம் வெளிவரும் என்று தெரிகிறது.
இசை வெளியீடு ஏப்ரல் மாதக் கடைசியில் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள்.