அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள படம் ‘ஒரு மெல்லிய கோடு’.
இந்தப் படத்தில் அர்ஜுன், ஷாம், அக்ஷாபட், நேஹா சக்சேனா, மனிஷா கொய்ராலா, ரவிகாளே, ஜீன், அருள்மணி மற்றும் பலல் நடித்துள்ளார்கள்.
இளையராஜா இசையைமப்பில் வெளிவர உள்ள 1001வது படம் இது. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இளையராஜா இசைத் தட்டை வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் அர்ஜுன், ஷாம், அக்ஷா பட், இயக்குனர் ரமேஷ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷ் கூறியதாவது,
“நான் இயக்கிய அனைத்து படங்களுமே நிஜ சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவை. இந்தப் படதின் கதை நிஜ சம்பவமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது அறிவீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படு வேகமான திரைக்கதை இருக்கும். ஆக்ஷன் திரில்லர் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இசைஞானி இளையராஜாவின் 1001 வது படம் இது. அவரது பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம். அவரது இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.
கன்னடத்தில் பிப்ரவரி மாதம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஏப்ரல் 1ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறோம்,” என்றார் இயக்குனர் ரமேஷ்.