‘கொம்பன்’ படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கி வரும் படம் ‘மருது’.
இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். சூரி, ராதாரவி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
முத்தையா இயக்கிய ‘குட்டிப்புலி, கொம்பன்’ இரண்டு படங்களுமே கிராமத்துப் பின்னணியில் உருவான வெற்றிப் படங்கள்.
‘மருது’ படமும் அதே போல உருவாகி வருகிறது.
மிகப் பெரிய வெற்றியை நோக்கி காத்திருக்கும் விஷாலுக்கு ‘மருது’ படம் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது.